எரிபொருள் விலை குறைப்பு ! எரிந்த அரசியல் நெருப்பை எரிபொருள் ஊற்றி அணைத்த ரணில்

0

எரிபொருட்களின் விலை குறைப்பு இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித் துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள விலை எவ்வாறு குறைவடையும் என்பதற்கான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதற்கமைய ஒரு லீற்றர் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 96 பெற்ரோல் 10 ரூபாவினாலும் ஒக்டேன் டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவினால் குறைவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.