கிளிநொச்சியில் தொடரும் மழை; வெள்ளத்தில் மூழ்கும் தாழ்நில கிராமங்கள்!

0

கிளிநொச்சியில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தாழ்நில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. கிளிநொச்சியின் ஆனந்தபுரம், இரத்தினபுரம், மருதநகர், பரந்தன், சிவபுரம் முதலிய பகுதிகளில் தற்போது வெள்ளம் பாய்ந்து வருகின்றது.

இதேவேளை தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இன்றும் வடக்கில் கனமழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், கடந்த நில நாட்களின் முன்னர் ஏற்பட்டதைப் போன்று வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது பெய்து வரும் மழையினால் இரணைமடுக்குளத்தின் நீரின் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது. வெள்ள அபாயம் காரணமாக தற்காலிக முகாங்களில் தங்கியுள்ள மக்கள் இன்னமும் வெளியேறாத நிலையில் வடக்கில் மீண்டும் கடும் மழையும் வெள்ளமும் அச்சுறுத்தி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.