வன்னியில் நடந்த பயங்கரம்!! பேருந்துக்குள் நுழைந்து சாரதி ,பயணிகளை கடுமையாக தாக்கிய காடைக்கும்பல் ! படங்கள் உள்ளே

0

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்றினுள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் மீது காடைத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரியவருவதாவது,

நேற்றுக் காலை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் போருந்து மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி பயணித்து கொண்டிருக்கையில் தர்மபுரம் பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் முன்னுக்கு வெட்டி வெட்டி ஓடியுள்ளார்கள்.

இந்த நிலையில் நெத்தலியாற்று பலத்தினை தாண்டி சென்றபோது ஹயஸ் வாகனத்தை முன்னுக்கு விட்டு தனியார் பேருந்தினை மறித்துள்ளார்கள்.

இதன்போது தனியார் பேருந்தின் சாரதி பேருந்தினை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து ஹயஸ் வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள் பேருந்தின் முன்பக்கத்தின் மின்குமிழ் மீதும் பக்கக் கண்ணாடி மீதும் தாக்குதல் நடத்தி உடைத்தெறிந்துள்ளார்கள்.

பேருந்துக்குள் புகுந்த அவர்கள் சாரதியினை தாக்கியுள்ளதுடன் பேருந்தில் இருந்த பயணிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதன்போது பயணிகள் இருவர் காயடைந்துள்ளார்கள். தலைக்கவசத்தினை கொண்டும் பணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதேவேளை இரும்பு கம்பிகள் கொண்டு பேருந்தின் ஓட்டுனர் நடத்துனர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதன்போது பேருந்தில் இருந்த பயணிகள் அல்லோல கல்லோலப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் அரைமணிநேரம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணிகள் 119 தொலைபேசிக்கு தொடர்புகொண்டு தகலை தெரியப்படுத்தியபோதும் தர்மபுரம் பொலிசார் வருகை தரவில்லை.

மாலை 6.00 மணிக்கு முத்து ஜயன் கட்டுக்கு செல்லவேண்டிய பேருந்து நெத்தலிஆற்று பாலத்தில் பொலிசாரை பார்த்து காத்திருந்தும் பொலிசார் வரவில்லை.

எவ்வாறாயினும் அந்த கொலைவெறித் தாக்குதலலை நடத்தியவர்கள் யார் என பேருந்தின் ஓட்டுநரால் இனம் காணப்பட்டுள்ளது.

அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பிரதேச வாசிகள் கூறுவதுடன் இந்த சம்பவத்திற்கு பொலிஸ் வராதது சந்தேகத்தை தோற்றுவித்திருபதாக மக்கள் கூறுகின்றனர்.

ஒட்டுசுட்டானை சேர்ந்த பேருந்தின் நடத்துநனர் தலையில் தோள்பட்டையில் காயமடைந்துள்ளதுடன் அவரின் மேல் ஆடையும் கிழித்தெறியப்பட்டுள்ளது.

பேருந்தினை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் கொண்டுசென்று அங்கு புதுக்குடியிருப்பு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பயணிகளின் முறைப்பாட்டினை பொலிசார் எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முத்து ஜயன் கட்டிற்கு செல்லும் மக்கள் 9.00 மணியவரை பேருந்தில் காத்திருந்தே பயணித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.