சகல அரச ஊழியர்களுக்கும் புதிய அரசாங்கத்தின் மகிழ்ச்சிச் செய்தி !

0

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும், ஏற்கனவே கூறியதன்படி அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சில் நேற்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்ததன் பின்னர் அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் மேற்படி கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட அவர்,

”பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பித்தவுடன் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் 40 இலட்சம் பிள்ளைகள் பயன்பெறுவார்கள்.

புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போயிருந்தால் அடுத்த ஆண்டு அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, உர நிவாரணம், சமுர்த்தி நிவாரணங்கள் முதலானவற்றை வழங்க முடியாமல் போயிருக்கும்.

அடுத்த வருடத்தின் முதல் மாதத்தில் அரச செலவினங்களுக்காக ஆயிரத்து 765 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தொள்ளாயிரத்து 70 பில்லியன் ரூபா கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தொகையாகும். முதல் 4 மாதங்களுக்கான செலவினங்களில் 55 சதவீதத்தை கடன்களையும் வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்காக பயன்படுத்த வேண்டியிருக்கிறது” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.