சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தெரிவு!

0

 சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் அங்கு தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கின்றது.

காங்கிரஸ் கட்சியின் விசேட கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் அக்கட்சியின் முக்கியஸ்தரான டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்றது.

குறித்த இந்த ஆலோசனை கூட்டத்திலேயே சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேஷ் பாகேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அம்மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டாவது முதலமைச்சராகவும் பூபேஷ் பாகேல் நாளை மாலை 5 மணியளவில் பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.