சாலையில் ஓடிய சாக்லெட் ஆறு ! நடந்தது என்ன ? ! ஆஹா வாய் ஊறுதே

0

ஜெர்மனியில் தீயணப்பாளர்கள் ஒரு விசித்திரமான சம்பவத்திற்குத் அழைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெர்ல் (Werl) நகரத்தின் சாலையில் சாக்லெட் ஆறுபோல வழிந்தோடியுள்ளது.

கற்பனையில் இடம்பெறும் காட்சிகள் போன்று நேற்று முன்தினம் ஜெர்மனியில் ஆறுபோல சாக்லெட் வழிந்தோடியுள்ளது.

சாக்லெட் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றின் தொட்டியில் இருந்த திரவ சாக்லெட் நிரம்பிவழியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் சாக்லெட், கட்டடத்திற்கு வெளியே கசிந்து சாலையில் வழிந்தோடியது.

சம்பவம் பற்றிய தகவலைப் பெற்ற தீயணைப்பாளர்கள் விரைந்து சென்று சாலையை மூடி, மண்வாரியால் சாக்லெட்டை சாலையோரமாகத் தள்ளினர்.

அதன் பின்னர் சாலை சுத்தம் செய்யப்பட்டது. வாயில் போடவேண்டிய சாக்லெட் இப்படி வழிந்தோடியதே என்று வருந்தினாலும் வெர்ல் நகரில் சாக்லெட்டுக்குப் பஞ்சம் ஏற்படாது என்று தீயணைப்புத்துறையினர் ஆறுதல் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.