செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம் – தமிழிசை ட்வீட்.!

0

கர்நாடகத்தில் காவிரி அணையின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ச்சியாக முயற்சித்து வந்த நிலையில், மேகதாதுவிற்கு குறுக்கே அணைக்கட்டுவதற்கான அறிக்கையை மத்திய நீர்வளத்துறை சில தினங்களுக்கு முன்னதாக ஏற்றுக்கொண்டது. மேலும், அணை கட்டுவதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறானதோர் அணை கட்டப்படுமேயானால் தமிழர்களின் வாழ்வாதாரம், விவசாயம் பாதிக்கப்படும் எனவே காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கிட கூடாதென வலியுறுத்தி, இன்று தஞ்சையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் போராட்டம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தொடர்ச்சியாக தமிழர் விரோத போக்குடன் செயலாற்றி வரும் பாஜக தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாதது. தாமரை ஒருபோதும் மலராது என பாஜகவை கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில், ஸ்டாலினின் மேற்கண்ட விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை, “ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்” என தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.