தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1,146.12 கோடி ஒதுக்கீடு!

0

கஜா புயலின் காரணமாக அதிகமான பாதிப்புக்கு ஆளான நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம், தமிழக அரசு சுமார் 15000 கோடி நிதி கோரியிருந்த சூழலில், ரூ.1,146.12 கோடியை நிவாரண பணிகளுக்காக ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சிதைத்து போட்டது போல் அதிகப்படியான பாதிப்புகளையும், சேதாரங்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருந்த கஜா புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் வந்து காண வேண்டுமென கமல்ஹாசன் உள்ளிட்டோர் பலர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசின் சார்பில் ஓர் ஆய்வு குழு தமிழகம் வந்து புயல் பாதிப்புகள் குறித்து தகவல்களை சேகரித்து சென்றது.

புயல் பாதிப்புகள் அதிகமாக உள்ள காரணத்தினால் மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கும் என தமிழக அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்த சூழலில், நிவாரண பணிகளுக்காக ரூ.1,146.12 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்நிலைக்கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.