தமிழர் தாயகத்தை உலுக்கிய பேய் மழை; ஜனாதிபதியின் அவசர உத்தரவு!

0

வடக்கில் ஏற்பட்ட மழைவீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சகல நிவாரண உதவிகளையும் வழங்குமாறு சகல தரப்பினக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்திக் குறிபொன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. குறித்த செய்திக்குறிப்பின்படி,

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.12.23

Leave A Reply

Your email address will not be published.