நடுரோட்டில் உயிருக்கு போராடிய மாணவி.! காப்பாற்றுங்கள் என கதறியும் வீடியோ எடுத்த மக்கள்

0

இந்தியாவில் குண்டு பாய்ந்து இரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிய மாணவியை, அங்கு சுற்றியிருந்த மக்கள் ஏதேனும் உதவாமல், செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்தவர் ஜுலி. 9-ஆம் வகுப்பு படித்து வரும் இவரை, திபு என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இவர் பல முறை தன்னுடைய காதலை அந்த சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுமி ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவர், ஜூலியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

சுமார் 4 குண்டு பாய்ந்து இரத்தம் வழிந்த நிலையில் ஜுலி உயிருக்கு போராடியுள்ளார். தன்னை காப்பாற்றுமாறு அங்கிருப்பவர்களிடம் கதறுகிறார்.

ஆனால் அங்கிருப்பவர்களோ அந்த பெண்ணுக்கு உதவாமல், செல்போனில் தொடர்ந்து வீடியோ எடுத்தாவாறே இருந்தனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், வீடியோவைக் கண்ட பலரும் உதவாமல் இப்படி வீடியோ எடுப்பது அதிர்ச்சியாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.