பணத்தை விட என்னைப் பிடிப்பதில்தான் இந்தியாவிற்கு அதிக அக்கறை: விஜய் மல்லையா மிரட்டல்!

0

 எனது பணத்தை பெறுவதை விட என்னைப் பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அளித்த பேட்டியில் விஜய் மல்லையா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2016ஆம் ஆண்டில் முழுப்பணத்தையும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

உண்மையிலேயே என்னிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகின்றது.

இந்தியா வருவதற்கான உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்வது குறித்து எனது சட்டத்தரணிகளுடன் விவாதித்து வருகிறேன். அதற்கான வாய்ப்புகள் இருந்தால் மேன்முறையீடு செய்வேன்” என விஜய் மல்லையா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.