பிரதமராக ரணில் விக்கிரமசிங்கதான் நியமிக்கப்படவேண்டும்! ஐ.தே.மு

0

ஸ்ரீ லங்காவின் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான் நியமிக்கப்படவேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் இன்றுகாலை கூட்டமொன்றில் கூடி இந்த ஏகோபித்த முடிவுக்கு வந்திருப்பதாக கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.

இந்த முடிவின் பிரகாரம் இன்று மாலை சிறிலங்காவின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கும்போது தமது நிலைப்பாட்டை நேரடியாகவே கூறவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

எவ்வாறாயினும் ரணில் அல்லாத பிரதமர் குறித்து ஆலோசிக்கலாம் எனவும் ரணிலை ஒருபோதுமே பிரதமராக நியமிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிவரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்லமை அரசியலை மேலும் சிக்கல் நிலைக்குத் தள்ளியிருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.