பிரபாகரன் குண்டுகளால் செய்ய முடியாதவற்றை, சுமந்திரன் பேனாவால் செய்கிறார்!!

0

2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு ஜனவரி வரை வடக்கு கிழக்கில் ஒரு பட்டாசு கூட வெடிக்கவில்லை. 2015 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதியில் இருந்து ஆவா குழு உருவானது. அன்று வேலுப்பிள்ளை பிரபாகரனினால் குண்டுகளால் செய்ய முடியாமல் போனதை இன்று சுமந்திரன் பேனாவால் செய்துகொண்டுள்ளார் என ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன,

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று சுமந்திரன் தனது மதிநுட்பத்தின் ஊடாக ஒப்பந்தத்தில் பெற முயற்சிக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சி தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள நாட்டையே காட்டிக் கொடுக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார் .

தமிழ் தேசியகூட்டமைப்பினரும்,பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனும் எதிர்பார்த்த விடுதலை புலிகளின் அமைப்பு தற்போது வடக்கில் உருவாகி வருகின்றது. தேசிய அரசாங்கம் கடந்த மூன்று வருடகாலமாக நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்தது எனவும் தெரிவித்தார் .

இதேவேளை வணக்கத்துக்குரிய தம்பர அமில தேரர் உட்பட 57 பேருக்கு, கடந்த 3 வருடங்களுக்குள் லிட்ரோ எரிவாயு நிறுவனம் பல மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் வழங்கியுள்ளதாக ஊடகவியலாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.