பொங்கலுக்கு விருந்து படைக்கவிருக்கும் படங்கள் ! அடேங்கப்பா இத்தனை படங்களா ?

0

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி 52 புதிய படங்களை திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தை பட அதிபர்கள் வற்புறுத்தினர்.

இதைத்தொடர்ந்து 2 பண்டிகைகளிலும் எவ்வளவு படங்களை வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்ளலாம் என்று சங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வர உள்ளன. வருகிற 14 ஆம் திகதி விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, ஜானி, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, புதிய பிரபஞ்சம், துலாம், பிரபு, திரு, ஓடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் ஆகிய 11 படங்களை திரைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற 21 ஆம் திகதி விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுசின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம்,

ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன.

பொங்கல் பண்டிகையில் பேட்ட, விஸ்வாசம் படம் மட்டுமில்லாமல், 22 படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதனால் தியேட்டர்களை பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Leave A Reply

Your email address will not be published.