மன்னிப்புக் கோரினால் மட்டுமே அமைச்சுப் பதவி ! அதிரடி காட்டும் மைத்திரி

0

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த காலங்களில் தாம் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டும்.

அவ்வாறு கோரினால் மட்டுமே அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவையை நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக தெரியவருகிறது.

கடந்த காலங்களில் ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சரத் பொன்சேகா கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதிக்கு மூளை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் பைத்தியகாரனை போல் நடந்து கொள்வதாகவும் பொன்சேகா தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.