மீண்டும் அமைச்சரானார் விஜயகலா ! கடும் சீற்றத்தில் பேரினவாதிகள்

0

விஜயகலா மகேஸ்வரனுக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கல்வி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் விடுதலை புலிகள் தொடர்பில் சர்ச்சை கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனும் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

விடுதலை புலிகளில் சர்ச்சை கருத்தை அடுத்து இராஜாங்க அமைச்சு பதவியை இழந்தார்.

இவ்வாறான நிலையில் விஜயகலா மகேஸ்வரன் தற்போது பதவி பிரமாணம் செய்திருப்பது தென்னிலங்கை ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.