முதல்வருக்கு எதிராக அவதூறு பேச்சு; ஆ.ராசா மீது வழக்கு பதிவு!

0

கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி பெரம்பலூரில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான ஆ.ராசா, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்குகள், குட்கா ஊழல் வழக்கு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி முதல்வர் பழனிசாமி, மற்றும் அமைச்சர்களை கடுமையாக சாடி பேசியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு பேசியதாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி வழக்கறிஞர் துரை பெரியசாமி என்பவர் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரின் அடிப்படையில் ஆ.ராசா மீது நான்கு பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, நெடுஞ்சாலை துறையில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என ஆ.ராசா கேள்வியெழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.