முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி எச்.டபிள்யூ.புஷ் உடல் முழு அரச மரியாதைகளுடன் நல்லடக்கம்! காணொளி உள்ளே

0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெபர்ட் வோக்கர் புஷ் (ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அவர் கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் ஜனாதிபதி பதவி வகித்து வந்தார். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் அவர் பதவி வகித்தார்.நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிபம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ்ஷின் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக ஜனாதிபதிகள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்தார்.பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் சிறப்பு விமானமான ‘எயார் ஃபோர்ஸ் வன்னில், ஜோர்ஜ் புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டதால் இந்த விமானத்துக்கு ‘41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டது.

அந்த விமானத்தில் ஜோர்ஜ் டப்ளியு புஷ் உடல் வொஷிங்டன் நகரை வந்தடைந்தது. விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்புடன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.அங்கிருந்து கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகைக்கு ஜோர்ஜ் டப்ளியு புஷ்ஷின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்குள்ள வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் உடலுக்கு தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப், முன்னாள் ஜனாதிபதிகள் ஜோர்ஜ் புஷ், பெராக் ஒபாமா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.மேலும், முன்னாள் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புஷ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் அரசின் சார்பில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர், வொஷிங்டனில் இருந்து டெக்சாஸ் மாநிலத்துக்கு புஷ்ஷின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் லேசாக பெய்த மழைக்கிடையில் அவரது மனைவி பார்பரா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் புஷ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.