யாழ்ப்பாணத்தில் கத்தி, வாள்கள், பொல்லுகளுடன் பயணித்த 9 பேர் கொண்ட இளைஞர்குழு மடக்கி பிடிப்பு ..!! இன்று அதிகாலை சம்பவம்…!!

0

வாள்களுடன் வான் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று அதிகாலை 3 மணியளவில், மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து இவர்களைக் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் அரியாலை, மானிப்பாய், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற கொள்ளை, அரியாலையில் வங்கி முகாமையாளரின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல், பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.வான் ஒன்றில் 6 வாள்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட 09 பேரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் 09 பேரையும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.