ரணிலின் முகத்தில் ஓங்கி அறைந்த மைத்திரி; அதிர்ந்துபோன ஐ.தே.க உறுப்பினர்கள்!

0

முடிந்தால் கடாபிக்கு வந்த நிலையை தனக்கும் வர வைக்கமுடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இன்று பிரதமர் நியமனம் வழங்கியபின் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்து அவர் இதனை முகத்தில் அறைந்தாற்போல் கூறியுள்ளார்.

“மத்திய வங்கி மோசடி, இராணுவ வீரர்கள் மற்றும் பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள் தான் நீங்கள். இன்று நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாதென்றே நான் இந்த முடிவுக்கு வந்தேன். கடாபி போன்ற நிலைமை எனக்கு வரும் என்று சொன்னீர்கள். முடிந்தால் அப்படி செய்யுங்கள்.” என்றார்.

இதன்போது அதுகிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் இருந்துள்ளனர். ஜனாதிபதியின் மேற்படி உரை இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.