வவுனியாவில் கிணற்றை எட்டிப்பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

0

வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து 24 வயதுடைய நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதிகாலை வேளை தந்தை வயலுக்கு சென்று வீடு திரும்பிய சமயத்தில் வீட்டில் மகனை காணவில்லை என தேடியபோது இளைஞர் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்களுக்கு சம்பவத்தினை தெரியப்படுத்தியதையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 24வயதுடைய ஜெகமோகன் எனவும் மரணத்திற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.