விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவே கூட்டமைப்பு! கஷ்டப்பட்டு ஆதாரத்தை கண்டுபிடித்தார் கம்மன்பில

1

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது உயிரிழந்த புலிகளின் நோக்கங்களுக்காக செயற்பட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “2001 ஆம் ஆண்டு புலிகளுடன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதானே இருக்கின்றது அவர்களை எப்படி புலிகள் என்று கூறலாம் என நீங்கள் கருதலாம்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியது போல் மறந்து போன மக்களுக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக செயற்பட்டது.

பிரபாகரனுடன் சந்திப்பில் சம்பந்தன் கலந்துக்கொண்டார். உயிரிழந்த புலிகளின் தலைவர்களை நினைவு கூரும் நிகழ்வில் சம்பந்தன் கலந்துக்கொண்டார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனை அடிக்கடி சந்தித்து தமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியது.

அன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது உயிரிழந்த புலிகளின் நோக்கங்களுக்காக செயற்பட்டு வருகிறது என்பதை நாங்கள் மிகவும் தெளிவாக கூறவேண்டும்” என உதய கம்மன்பில தெரிவித்தார்.

1 Comment
  1. CheranSenkuttuvan says

    Yella tamilarum inainthu pora final Tamilarukku ended oru Desam nitchaiyam

Leave A Reply

Your email address will not be published.