ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ; ஓபிஎஸ் நேரில் ஆஜராக உத்தரவு

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாகவும், ஜெயாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் அப்போது அதிமுகவிலிருந்து தனி அணியாக பிரிந்து செயல்பட்டுவந்தவரும் தற்போதைய துணை முதல்வருமான பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், ஜெயா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியைக் கொண்டு விசாரணைக் கமிஷனை நியமித்தது பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்கள், உறவினர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் விசாரணை கமிஷனில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்து வருகின்றனர். ஜெயா மரணம் குறித்து விசாரிக்க சிலருக்கு விசாரணை கமிஷனே சம்மன் அனுப்பி ஆணையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் 20 ஆம் தேதி ஜெயாவின் மரணம் குறித்து விசாரிக்க துணை முதல்வர் ஓபிஎஸ், மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொன்னையன் ஆகியோரை விசாரணை கமிஷனில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது ஆறுமுகசாமி கமிஷன்.

முன்னதாக, ஜெயா சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது அமைச்சரவை பொறுப்புகளை கவனித்து வந்த ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடத்தில் ஆறுமுகசாமி கமிஷன் இன்னமும் விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி பல தரப்பினரால் எழுப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.