6 ஆவது தடவையாக மீண்டும் கட்சி தாவி சாதனை! பசிலுடன் வசந்த சேனநாயக்க!

0

அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டு இத்துடன் 6 ஆவது தடவையாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க புதிய அரச தரப்பிற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே புதிய அரசாங்கத்தில் தாம் இணைந்து கொண்டதாகவும் பின்னர் ஜனநாயகம் அங்கு இல்லை என தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அத்துரலிய ரத்தன தேரரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பசில் ராஜபக்ஷ மற்றும் உதய கம்மன்பிலவுடன் இணைந்து வசந்த சேனநாயக்கவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஏற்கனவே மீண்டும் மீண்டும் கட்சி தாவிய உறுப்பினர்கள் மீது மக்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்ற நிலையில், மீண்டும் இடம்பெற்றிருக்கும் குறித்த தாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.