“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி

0

ரஜினிகாந்த் வருடத்திற்கு வருடம் இளமையாகி வருவதாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் 10 வருட புகைப்படம் சேலெஞ்சில் தெரிவித்துள்ளார்.

சமூக வளைதளங்களில் ட்ரெண்டாகி வரும் 10 வருட சவால் (10 Years challenge) என்ற ஹேஷ்டாகில் பிரபலங்கள் 10 வருடங்களுக்கு முன் தாங்கள் இருந்த புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். தென்னிந்திய பிரபலங்களில் ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராஷி கண்ணா எனப் பலர் தங்கள் புகைப்படங்களை சமூக வளைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினி புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அந்த சவாலில் இணைந்துள்ளார். அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது தந்தையின் புகைப்படத்தை அந்த ஹேஷ்டாகில் பகிர்ந்துள்ளார். ரஜினியின் பாட்ஷா, கபாலி,பேட்ட ஆகிய படங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், “வருடத்திற்கு வருடம் இளமை, என் அப்பா வலிமையானவர்”என்று பதிவிட்டுள்ளார்.

View image on Twitter

soundarya rajnikanth@soundaryaarajni

#10yearsChallenge or more !!!! Bring it on !!! Younger with every year !!! #MyDaddyStrongest !!!!! 20K22:30 – 20 Jan 20192,746 people are talking about thisTwitter Ads information and privacy

திரைப்பிரபலம் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள்,அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த சேலெஞ்சை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், இந்த 10 வருட சவாலையே மையமாகக் கொண்டு சில அரசியல் கட்சிகள் 5 வருட சவால் என்ற ஒன்றை பிரபலப்படுத்தி வருகிறார். சிலர் அதில் தங்களை புகழ்வதும், பிற கட்சியை குறை கூறுவதும் என சமூக வலைத்தளமே அதகளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.