கதிகலங்கிய யாழ்ப்பாணம்: மக்களை பலநாட்கள் அலறவைத்த கொள்ளையன்! படங்கள் இணைப்பு!!

0

யாழ்ப்பாணக் குடா நாட்டில் பல்வேறு வழிப்பறிக் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுவந்ததாக கருதப்படும் கொள்ளையர் ஒருவரை தாம் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணப்பைகள் பறித்தல் மற்றும் தங்கச் சங்கிலி அறுத்தல் உள்ளிட்ட பல கொள்ளைகளால் யாழ்ப்பாணம் சில நாட்களாக அதிர்ந்தது.

அந்த கொள்ளை நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்ட இளைஞரே நேற்றைய தினம் சாவகச்சேரி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைமூலம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து உருக்கிய நிலையில் ஆறுபவுண் தங்கமும் கொள்ளை நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட அதி நவீன உந்துருளி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர் பொலிஸ் விசாரணைகளின்பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று சாவகச்சேரி பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.