கிணறு இரைத்த தேவப் பெருமவின் மறுபக்கம்! படங்கள் இணைப்பு!!

0

பாலித்த தெவரபெரும என்ற ஐதேக பாராளுமன்ற உறுப்பினர், வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாண் கொடுத்த படங்களையும், கிணற்ைற தூர்வாரிக் கொடுத்த படங்களையும் பகிர்ந்து புகழ்ந்து வருகின்றார்கள்.

இந்த தெவரபெரும என்பவர் நல்லாட்சி அராங்க காலத்தில் (2015 – சனவரி) முருகேசன் புஸ்பகுமார என்ற தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை நடுத்தெருவில் முழங்காலில் இருத்தி இனவாத வார்த்தைகளால் வசைபாடி தாக்கியிருந்தார்.

இன்னும் தேடி பாரத்தால் பாடசாலைகளில் புகுந்து ஆசிரியர்களை தாக்குவது, பொதுநிகழ்வில் புகுந்து குழப்பம் விளைவிப்பது என ஏகப்பட்ட வரலாறுகள். பாராளுமன்றத்துக்கு சென்ற நாட்களை விட பொலிசுக்கும் நீதிமன்றத்துக்கும் சென்ற நாட்கள் தான் அதிகம்….

எல்லா அயோக்கிய தனங்களையும் செய்துவிட்டு மக்களுக்கு உதவுவதாக நான்கைந்து புகைபடங்களை பகிர்ந்து விட்டால் எல்லாம் நல்லவராகிவிட முடியும் என்ற நிலையிலா மக்களி் ஞாபக சக்தியும் அரசியல் தெளிவும் இருக்கிறது?

இவர் முருகேசன் புஸ்பகுமாரை நடுவீதியில் வைத்து தாக்கியதை கண்டித்து போர்க்கொடி தூக்கிய பலர் இன்று அவரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தெவரபெரும மாறிவிட்டாரா? நீங்கள் மாறிவிட்டீர்களா?

Leave A Reply

Your email address will not be published.