கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு ! நடந்தது என்ன ? படங்கள் உள்ளே

0

கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீ வைத்து எரிப்பு!

பரந்தன்-முல்லைத்தீவு பிரதான வீதியின் விஸ்வமடு சந்திக்கு அருகாமையில் இன்று (24.01.2019) சற்று முன் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருகையில்,

விஸ்வமடு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகாமையில் இரு இளைஞர்கள் மதுபானம் அருந்திய நிலையில் கதைத்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது இருவருக்குமிடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டதுடன் குறித்த இளைஞர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்கு தீயூட்டியுள்ளார்.

சடுதியாக செயற்பட்ட மக்கள் மோட்டார் சைக்கிளில் பற்றியெரிந்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் குறித்த இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிலில் இருவரும் ஒன்றாக வருகை தந்துள்ளனர். அதன் பின்னர் விசுவடு பகுதியில் உள்ள மதகில் இருவரும் அமர்ந்திருந்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போது இவர்களில் ஒருவர், “வா போவம்” என தெரிவித்த சமயத்தில், மற்றைய நபர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்தே உனது மோட்டார் வண்டி தேவையில்லை என தெரிவித்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளினை எரித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.