கோமாவில் நிலையில் இருந்த பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ! மர்மங்கள் அம்பலம் ! வசமாக மாட்டிய தாதி

0

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் ஒரு பெண்ணின் மீது நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறலுக்குக் காரணமான சந்தேக நபரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சுமார் 14ஆண்டுகளாக நலிந்து, நினைவிழந்த நிலையில் பராமரிப்பு நிலையத்தில் இருக்கிறார்.

ஆனால், சென்ற மாதம் அவர் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றார்.

அதற்குக் காரணமான சந்தேக நபர், சதர்லேண்டைச் சேர்ந்த நேதன் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

நேதன் அந்தப் பராமரிப்பு நிலையத்தில் உரிமம் பெற்ற தாதியாக வேலை செய்தவர்.

அவர் மீது பாலியல் அத்துமீறல், பெரியவர்களை துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தற்போது அந்தக் குழந்தையைப் பராமரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.