சபரி மலை ஐயப்பனை தரிசிக்க சென்ற முதலாவது இலங்கை பெண் ! இறுதியில் நேர்ந்த கதி !

0

கேரளாவில் மருத்துவச் சான்றிதழுடன் சபரிமலைக்கு வந்த 46 வயது இலங்கை பெண்ணுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு ஆண்டாண்டு காலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த வருடம் செப்டம்பர் 28-ஆம் திகதி உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

இதனால் சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்று வருகின்றனர். ஆனால் போராட்டக்காரர்களால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை, கேரளா மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டினை சேர்ந்த இரண்டு பெண்கள் பிந்து மற்றும் கனகதுர்கா சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வந்தனர்.

இதன்காரணமாக கோவிலின் நடை பரிகார பூஜைக்காக சுமார் 1 மணி நேரம் மூடப்பட்டிருந்தது. பின்பு கோவில் ஆச்சாரம் மீறப்பட்டதை தொடர்ந்து கேரளாவில் ஆங்காங்கே போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் வெடித்தன

இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஏராளமானோரை பொலிசார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பான சூழலில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா(46) தன் கணவருடன் நேற்று இரவு 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.

ஆனால் அவர் 18 படி மட்டுமே ஏறியதாகவும், தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ஐயப்ப பக்தை. முறையாக 48 நாட்கள் விரதமிருந்து வந்துள்ளேன்.

நான் என்னுடைய கர்ப்பப் பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்துவிட்டேன். அதற்கான மருத்துவ சான்றிதழும் என்னிடம் இருக்கிறது. ஆனாலும், என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். 18 படிகள் மட்டுமே ஏறினேன், சாமி தரிசனம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

ஆனால், அவர் ஐயப்பனை நிச்சயம் தரிசனம் செய்திருப்பார் என்று பொலிசார் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.