சம்பந்தனை முதன் முதலில் சந்தித்த வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன்!

0

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என சம்பந்தரிடம் சுரேன் ராகவன், ஆலோசனை கேட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.