சற்று முன்னர் மேலும் சில புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் !

0

விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி. ராதாகிருஷணன் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய அமைச்சரவை சில வாரங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதியமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் பகுதியளவில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக வி. ராதாகிருஷணன் பதவியேற்றுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, கல்வி ராஜாங்க அமைச்சராக வி. ராதாகிருஷணன் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொழில் மற்றும் தொழிற்சங்க விவகார அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ரவீந்திர சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.