சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு ! தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம் ! படங்கள் உள்ளே

0

தைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் வளாகத்திலேயே இந்த வாள்வெட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் இரு இளைஞா்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனா்.

தை பொங்கல் தினமான இன்று பிற்பகல் 1.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞா்கள் அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.

இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது முத்தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலதிக செய்தி விரைவில்.

Leave A Reply

Your email address will not be published.