சுவிட்சர்லாந்தின் புதிய சட்டம்? ஈழத் தமிழர்களை பாதிக்குமா?

0

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில் அயல் நாட்டவர்களுக்கான புதிய விதிகள்

புதுப்பிக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 58இன்படி அயல் நாட்டவர்கள் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்கிறார்களா என்பது, சட்டம் ஒழுங்கைப் பின்பற்றுதல், அரசியல் சாசனத்தை மதித்தல், போதுமான மொழித்திறன் கொண்டிருத்தல் மற்றும் பொருளாதாரம் மற்றும் கல்விக்கு பங்களிப்பு செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.

மதிப்பீட்டில் தோல்வியுறும் அயல் நாட்டவர்கள், ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் என்னும் படிவத்தில் கையெழுத்திட கோரப்படுவார்கள்.

இந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை முறைப்படி பின்பற்றாதவர்கள், அதற்கு சரியான விளக்கமளிக்காத நிலையில், அவர்களது தற்காலிக வாழிட உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

அவர்களது C permit பறிக்கப்பட்டு அதற்கு பதில் B permit வழங்கப்படும்.

தொலைக்காட்சி உரிமக்கட்டணம்

2018இல் 451 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்த தொலைக்காட்சி உரிமக்கட்டணம் 365 சுவிஸ் ஃப்ராங்குகளாக குறைக்கப்படுவதோடு, Billag நிறுவனத்தால் முன்பு வசூலிக்கப்பட்ட இந்த உரிமக்கட்டணம் கட்டாயமாக்கப்படுவதோடு இனி Serafe ஏஜன்சியால் வசூலிக்கப்படும்.

மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம்

சுவிட்சர்லாந்தில் கட்டாய மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் 2019ஆம் ஆண்டில் 1.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தற்போது அனைத்து வயதினருக்கும் சராசரி கட்டணம் 315 சுவிஸ் ஃப்ராங்குகள். இந்த ஆண்டு 19 முதல் 25 வயதுக்குட்பட்டோருக்கான சராசரி பிரீமியம் 15.6 சதவிகிதம் குறைக்கப்பட்டு 274.10 சுவிஸ் ஃப்ராங்குகளாக்கப்படுகிறது.

ஆன்லைன் ஷாப்பிங்

அயல்நாட்டு இணையதளங்களிலிருந்து ஆன்லைனில் வாங்கப்படும் பொருட்களுக்கு VAT வரி விதிக்கப்பட இருப்பதால் அவற்றை வாங்குவதற்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

மருந்தகங்களில் சில மருந்துகளை எளிதாக வாங்கலாம்

Hay fever போன்ற நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் போன்ற சில மருந்துகளை, இனி மருத்துவரின் மருந்துச் சீட்டு இன்றியே மருந்தகங்களில் எளிதாக வாங்கலாம்.

தபால் அலுவலக விதிகள்

தபால் அலுவலக வசதிகளை பொதுமக்கள் எளிதில் எட்டும் வண்ணம் விதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

லாட்டரியில் விழும் எல்லா பரிசுகளுக்கும் இனி வரி கட்ட வேண்டியதில்லை. இனி ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு மேல் பரிசுத்தொகை பெறுவோருக்கு மட்டும் வரி விதிக்கப்படும்.

ஒரு முக்கிய தகவல்

2019இலிருந்து உயிரணு தானம் மூலம் பிறந்த குழந்தைகள் தங்கள் தந்தை குறித்த தகவல்களை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.வயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்

75 வயது மற்றும் அதற்கு அதிக வயதுடைய ஓட்டுநர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். முன்பு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வதற்கான வயது 70 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.