தந்தையால் 6 வயதில் கற்பழிக்கப்பட்டேன் ! 13 வயதில் கர்ப்பமானேன் ! 18 வயது பெண்ணின் மனதை உலுக்கும் சோக சம்பவம்

0

பிரித்தானியாவில் 6 வயதில் தந்தையால் கர்ப்பமான சிறுமியின் தற்போதைய நிலை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

6 வயதில் கற்பழிக்கப்பட்டேன், 13 வயதில் கர்ப்பமானேன் என்று தற்போது 18 வயதில் குறித்த பெண் வேதனையுடன் கூறியுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Shannon Clifton. தற்போது 18 வயதாகும் இவர் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்.

ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தன.

அவர் கூறுகையில்,

“நான் என் தந்தையால் நாள் ஒன்றிற்கு நாள் ஒன்றிற்கு நான்கு முறை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானேன்.

இதை அவர் எனக்கு 6 வயதில் இருந்தே கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இதன் காரணமாக 11 வயதில் கர்ப்பமானேன். ஆனால் அப்போது கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தையை இழந்தேன்.

அதன் பின் மீண்டும் 13 வயதில் கர்ப்பமானேன். அதை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என்பதற்காக என் தந்தை கடுமையான பயிற்சிகள் கொடுத்தார்.

அப்போது நான் 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். பள்ளியில் என்னைக் கண்ட நர்ஸ் ஒருவர் சந்தேகமடைந்து, மருத்துவரிடம் சோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

அதன் பின்னர் தான் என் அப்பா மாட்டிக்கொண்டார். அதன் பின் பொலிசார் விசாரணை என தொடர் விசாரணைக்கு பின்பு அவருக்கு Derby Crown நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

நான் என் அப்பாவை வெறுக்கிறேன். அவர் என்னை தினந்தோறும் அடித்து துன்புறுத்தி அவருடைய ஆசையை தீர்த்துக் கொள்வார். என் குடும்ப பிரச்சனை காரணமாக அப்பா, அம்மா இருவரும் பிரிந்துவிட்டனர்.

அப்பாவுடன் வாழ்ந்து வந்த போது தான் இந்த கொடுமை எல்லாம் என்று கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் Shannon Clifton-க்கு தற்போது குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.