தமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது?

0

பிரித்தானியாவில் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த சிறிலங்காவின் பிரிகேடியர் ஒருவர் கைதுசெய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என பிரித்தானிய நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் பிரகாரமே இவர் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக கூறப்படுகிறது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்படுள்ளது. பல்லியகுரு மற்றும் வினோத் பெரேரா ஆகிய இரு சிங்களவர்கள் பிரியங்கவுக்கு எதிரான வழக்குத் தாக்கல் ஒன்றினை கடந்த ஆண்டு செய்திருந்தனர்.

இதுதொடர்பான விசாரணைகள் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையிலேயே மேற்போன தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும் நாளைய வழக்கில் பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ பங்கேற்கப்போவதில்லை என தீர்மானித்திருப்பதாக மற்றொரு தகவல் கூறுகின்றது.

பிரியந்த பெர்னாண்டோ நாளைய வழக்கில் பங்கேற்காத சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு மேலும் வலுப்பெறலாம் என பிறிதொரு தகவல் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Leave A Reply

Your email address will not be published.