தமிழர் குறித்துப் பெருமிதம்! தைப்பொங்கலை முன்னிட்டு பேட்டி அளித்த கனடா பிரதமர்!

0

கனேடிய தமிழ் மக்கள் கனடா நாட்டின் வளர்ச்சியில் கனடாவுடன் இணைந்து பயணிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை வெளிப்டுத்தியுள்ளார்.

உலகத் தமிழரின் பண்பாட்டுப் பெருவிழாவான தைபொங்கல் திருநாளன்று கனடா பிரதமர் கனேடியத் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் பொங்கி மகிழ்வோடு கொண்டாடினார்.

இதுதொடர்பான சிறப்புக் காணொளித் தொகுப்பு ஒன்றினையும் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சிப் பிரிவுக்கு விசேட செவ்வி ஒன்றினையும் அவர் வழங்கியிருந்தார்.

இதில், கனடா நாட்டின் முன்னேற்றம் மற்றும் மக்கள் தொடர்பாக தமது அரசாங்கம் கொண்டிருக்கும் எதிர்காலத் திட்டங்கள் என்பனவற்றை எடுத்துக்காட்டினார்.

மேலும் கனடாவில் பல்வேறுபட்ட பண்பாடுகளைப் பின்பற்றும் சமூகத்தினர் வசிப்பதாகவும் அவ்வாறான தன்மையினை தாம் வரவேற்பதாகவும் கூறினார். அத்துடன் ஒருவருக்கொருவர் கொண்டாடும் பண்பட்டு விழாக்களை ஊக்கப்படுத்துவதன்மூலம் நாட்டில் உறுதிவாய்ந்த சமுதாயக் கட்டமைப்பு ஒன்றினை நிலை நாட்டமுடியும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தைப்பொங்கல் பண்டிகை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படுவதாக கூறிய ட்ரூடோ கனேடியத் தமிழர்கள் கனடாவின் வளர்ச்சியில் நாட்டுடன் இணைந்து பயணிப்பதாக மகிழ்ச்சி வெளியிட்டார்.

இதேவேளை இலங்கையின் உள் நாட்டுப் போர் நிறைவுபெற்ற பத்தாவது ஆண்டினை தாம் உணர்வுபூர்வமாக புரிந்துகொள்வதாக குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான நம்பிக்கைகள் மற்றும் நல்லெண்ண முயற்சிகளை அனைவரதும் சமாதானத்துக்காக இலங்கை அரசாங்கம் கட்டியெழுப்பவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.