பிரிகேடியர் பிரியங்கவைக் காப்பாற்ற சிங்கள அரசு முயற்சி? நடக்குமா?

0

பிரிகேடியர் பிரியங்கவைக் காப்பாற்ற இராணுவம், வெளிவிவகார அமைச்சு இணைந்து நடவடிக்கை

JAN 27, 2019 | 1:57by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசராக முன்னர் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீதான நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரி, மான்செஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சிறிலங்கா இராணுவம் முறைப்படியான முறையீடு ஒன்றைச் செய்யவுள்ளது.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் ஊடாக இந்த முறையீடு செய்யப்படும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ ஒரு கொண்டாடப்படும் போர் வீரர் என்றும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறும், சிறிலங்கா இராணுவம் முறையீடு செய்யும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

வரும் பெப்ரவரி 1ஆம் நாள் பிரிகேடியர் பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அன்றைய நாள் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை மீளப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்த விவகாரம் இராஜதந்திரம் தொடர்பான மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிசிடம்,  சிறிலங்கா அதிகாரிகள் தகவல்களை பரிமாறியுள்ளதாக, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

முறையாக நியமிக்கப்பட்ட இராஜதந்திரி என்ற வகையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் இராஜதந்திர விலக்குரிமையை உறுதிப்படுத்துமாறு தாம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இந்த நீதிமன்ற நடவடிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.