பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்!

0

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ அந்நாட்டு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றின் நீதவான் சோனியா ஹென்சலேவினால்தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதோடு, பிரித்தானியாவின் சகல காவல்துறை நிலையங்களுக்கும் அவர் தொடர்பான விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்கவிற்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஆதரவு புலம்பெயர் சமூகத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சு, சட்டத்தரணி ஒருவரை முன்னிலைப்படுத்தாததே இதற்கான காரணமாகும் என தெற்கு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

சட்டத்தரணி ஒருவரை முன்னிலைப்படுத்தாது, பிரிகேடியரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிடும் வரையில் காத்திருந்து விட்டு நீதவானின் தீர்ப்பினை கண்டிப்பதாக கூறுவது நகைப்பிற்குரியது என உலக இலங்கை அமைப்பின் சட்டத்தரணி ஒருவர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களின் இவ்வாறான செயற்பாடு படையினரை இழிவுபடுத்தும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் லண்டனில் பத்துக்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது, உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் புலம்பெயர் தமிழர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது போராட்டக்காரர்களை நோக்கி கழுத்தை அறுத்து கொலை செய்வதாக சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்தார் என பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.