மட்டக்களப்பில் பஸ் சாரதியின் அசண்டையீனம்! உடல் சிதறி பலியான தமிழ் விரிவுரையாளர் ! திகில் காணொளி உள்ளே

0

மட்டக்களப்பு – ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றும் உந்துருளியொன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த மட்டக்களப்பு- செங்கடியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய கந்தக்குட்டி கோமலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அவர் மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் என தெரியவந்துள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து முச்சக்கர வண்டியொன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த உந்துருளியுடன் மோதியுள்ளது.

விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதி காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

இச்சம்பவம் அருகிலிருந்த வர்த்தகநிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதவிவாகியுள்ளது.

மரணமடைந்தவரது உடற்பாகங்கள் சிதறியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.