மனைவியின் தவறான நடத்தை! தட்டிக் கேட்ட கணவன் ! காதலுடன் சேர்ந்து கொன்று குளிர்சாதன பெட்டியில் அடைத்த மனைவி

0

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் மனைவியின் தவறான நடத்தையை கண்டித்த இளைஞரை காதலருடன் இணைந்து கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

ஜார்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் நகரத்தில் குடியிருக்கும் தபன் தாஸ் என்ற இளைஞரையே மனைவியும் காதலரும் இணைந்து கொலை செய்துள்ளனர்.

மனைவி சுவேதாவுக்கு இன்னொரு இளைஞருடன் தொடர்பு இருப்பதாக அறிந்த தபன் தாஸ் இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார்.

இதில் இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளதால் காதலன் சுமித் சிங்குடன் இணைந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜனவரி 12 ஆம் திகதி மது போதையில் குடியிருப்புக்கு சென்ற தபன் தாஸை மனைவி மற்றும் காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் சடலத்தை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துள்ளனர். அடுத்த நாள் மாலையில் குளிர்சாதன பெட்டியுடன் சேர்த்து சடலத்தை காட்டுப்பகுதியில் மறைவு செய்துள்ளனர்.

மூன்று மாதம் முன்னரே பேஸ்புக் மூலம் சுமித் சிங்குடன் சுவேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தபன் தாஸின் மதுப்பழக்கம் தொடர்பில் சுவேதாவுக்கும் கணவருக்கும் இடையே எப்போதும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையிலேயே தமது பேஸ்புக் காதலருடன் இணைந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜனவரி 12-ஆம் திகதி சுமித் சிங் தமது நண்பர் சோனு லாலுடன் இணைந்து சுவேதாவின் குடியிருப்புக்கு செல்லும் கண்காணிப்பு கமெரா காட்சிகள் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று தமது கணவர் ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், இதுவரை எந்த தொடர்பும் இல்லை எனவும் சுவேதா தெரிவித்த புகார் பொய் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தை குளிர்சாதன பெட்டியுடன் மறைவு செய்ய உதவிய இன்னொரு நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.