மாவட்ட ஆட்சியரின் மனைவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர் ! பொலிஸ் நிலையத்தில் வைத்து போட்டுத் தாக்கும் ஐ.ஏ.எஸ்…! காணொளி உள்ளே

0

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இளைஞர் ஒருவர் அலிபூர்துவார் மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி நிர்மலின் மனைவி நந்தினிக்கு ஆபாச குறுங்செய்திகளை சமூக வலைத்தளம் ஊடாக தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

இது குறித்து பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டதை அடுத்து பினோத் சர்கார் என்ற அந்த இளைஞன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மாட்ட ஆட்சியருக்கும் இளைஞர் கைது செய்யப்பட்டமை குறித்து தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மனைவியுடன் காவல் நிலையத்திற்கு சென்றிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நிர்மல் கைது செய்யப்பட்டிருந்த இளைஞரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதனை அங்கி”ருந்தவர்கள் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நந்தினி அப் பதிவை பேஸ்புக் பக்கதில் பதிவிட்டு நிகில் உண்மையான ஹீரோ என்று குறிப்பிட்டிருந்தார். இப் பதிவு ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.