முல்லைத்தீவில் அதிகாரி உட்பட இரண்டு இராணுவத்தினர் பலி ! நால்வர் காயம் ! நடந்தது என்ன ? படங்கள் உள்ளே

0

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முல்லைத்தீவு – புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கோமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்துவிட்டு வவுனியா பகுதி நோக்கி வருகைதந்தவேளை இவ் விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்காகியுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் காயம்மடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் நால்வர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.