யாழ். மேயரை சந்தித்தார் ஒஸ்லோ மாநகர பிரதி மேயர்

0

ஒஸ்லோ மாநகர பிரதி மேயரான கம்சாயினி குணரட்னம் யாழ். மாநகரசபை மேயர் இம்மானுவல் ஆர்னோல்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று(6) இடம்பெற்றுள்ளதுடன் யாழ் மாநகர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதேவேளை இலங்கையில் பிறந்து நோர்வே நாட்டிற்கு புலம்பெயர்ந்த ஒஸ்லோ மாநகர பிரதி மேயரான கம்சாயினி வட மாகாண பெண்கள் அமைப்புக்களுடனும் யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் வைத்து கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது நேற்றைய குறித்த சந்திப்பில் பெண் தலைமைத்துவம் பெண்களின் அரசியல் பிரவேசம் ஈழத் தமிழர்களின் போருக்குப் பின்னரான நிலைப்பாடு போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும் 2015ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் களமிறங்கிய கம்சாயினி நோர்வேயின் வயது குறைந்த பிரதி மேயர் என்ற பெருமையை தட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.