வடக்கில் முதன்முறையாக இலங்கை வேந்தன் இராவணனிற்கு சிலை!

0

இலங்கை வேந்தன் என்றழைக்கப்படும் இலங்கையை ஆண்ட சிவ பக்தன் இராவணனுக்கு வவுனியாவில் சிலை வைத்தே தீருவேன் என நகரபிதா இ.கெளதமன் அறிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் அறியவருவதாவது நேற்றைய தினம்(18.01.2019) வவுனியா நகரசபை  சபா மண்டபத்தில் இடம்பெற்ற சபை கூட்டத்தில் வவுனியாவில் MGR சிலை வைப்பதற்கான விவாதம் மேற்கொள்கொள்ளப்பட்டது.

இதன்போது நகரபிதா அவர்கள் MGR சிலை வைப்பதற்கு சபை தீர்மானம் எடுக்கும் பட்சத்தில் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் இராவணன் மற்றும் எல்லாளன் ஆகியோருக்கும் வவுனியாவில் சிலை வைத்தே தீருவேன் என கூறியதுடன் அதனை தீர்மானமாக கொண்டுவந்திருந்தார்.

இதற்கான வேலை திட்டங்கள் வெகு சீக்கிரம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் இராவணனிற்கு சிலை வைப்பது என்பது என்னை பொருத்தவரையில் இதுவே வடக்கில் முதன்முறையாக இருக்கும் எனவும் எமது செய்தி தளத்திற்கு குறிப்பிட்டிருந்தார் இவ் அறிவித்தலானது தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.