வைத்தியருடன் தகாத உறவு! தாதிய மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த கணவன் !! கொழும்பில் பரபரப்பு…..!

0

ராகமை – கனேமுல்லை பகுதியில் நேற்றைய தினம் மனைவியை கத்தியால் வெட்டி கணவன் கொலை செய்தமைக்கான காரணம் வௌியாகியுள்ளது.கனேமுல்லை பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டார்.

குறித்த பெண் தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமை புரியும் பெண் ஒருவரே இவ்வாறு கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் தாதியாக கடமையாற்றும் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்கொண்டுள்ளமையை அறிந்து கொண்டுள்ள கணவர் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் குறித்த பெண், வைத்தியருடன் ஏற்படுத்திக்கொண்ட தகாத உறவினை நிறுத்திக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் வழமையை போன்று ஒரு தினம் குறித்த பெண் கடமைக்கு சென்ற பின்னர் கணவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

வைத்தியருடன் மனைவி தனியார் விடுதியில் இருப்பதாக அந்த அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.இதனையடுத்து கோபமடைந்த கணவர், மனைவி வீடு திரும்பியவுடன் அவரை கோபம் தீரும் வரை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.சரணடைந்த குறித்த நபரை கைது செய்த பொலிஸார் மனைவியை பார்வையிட அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.தரையில் வீழ்ந்து கிடந்த மனைவியை நோயாளர் காவு வண்டியில் ஏற்றி றாகமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இரத்தம் அதிகம் சிந்திய நிலையில் குறித்த பெண்ணை சிகிச்சைக்குட்படுத்திய வேளையில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த பெண்ணுடன் தகாத உறவினை வைத்திருந்த வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.