87 பில்லியனை மீளப்பெற அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு!

0

நாட்டில் கடந்த வரும் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை அடுத்து இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் நிதியுதவியை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக, 480 மில்லியன் டொலர் ( 87 பில்லியன் ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்கா கடந்த செப்டெம்பர் மாதம் அறிவித்திருந்தது. இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் கையெழுத்திடப்படவிருந்தது.

எனினும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இந்த உதவித் திட்டத்தை இடைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்தநிலையில், மிலேனியம் சவால் நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு உயர்மட்டக் குழு ஒன்றை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரைக் கொண்ட குழு, இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு செல்லவுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், இந்த நிதியுதவியை மீளப்பெற முடியும் என நம்பப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.