அஜீத்துக்கு என்னாச்சு? இப்படி மாறிவிட்டார்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

0

 ஒரு சினிமா நடிகர் பொதுவெளியில் தேவையில்லாமல் தலை காட்டக்கூடாது என்பது தல அஜித்தின் பாலிஸி. இதனால் அவர் நடிக்கும் படத்தின் பாடல் வெளியீடு, அது குறித்த பேட்டி என  எதிலும் அவர் பங்கேற்பதில்லை. என்று நீண்ட வருடங்களாக அதை கடைப் பிடித்தும் வருகிறார்.

அவரிடம் தனிப்பட்ட பேட்டி கேட்டால்கூட, வீட்டுக்கு வாருங்கள், எவ்ளோ நேரம் வேண்டுமானாலும் பேசுவோம், ஆனால் போட்டோ, பேட்டி எதுவும் வேண்டாம் என நெருக்கமான ரிப்போர்ட்டர்களிடம் கூறுவது அவர் வழக்கம்.

இந் நிலையில் அவரிடம் சில நாட்களாக திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் ஏக சந்தோஷத்தில் உள்ளனர் .அண்மையில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியில் அவரது வீட்டுக்கு வந்த அஜீத், மனைவியுடன் நின்று போஸ் கொடுத்தார். அதேபோல் ஹைதராபாத் செல்வதற்காக விமானநிலையம் வந்த அவர் ரசிகர்களுடன் செல்பி எடுத்து அசத்தினார். இதேபோல், ரசிகர்களுடன்  சாலையில் அமர்ந்து அஜீத்  போஸ் கொடுக்கும் படம் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அஜீத்தின் இந்த மாற்றத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.