அதிமுகவுக்கு கறிவிருந்து… பாமகவுக்கு பட்டினியா? – பொதுக்குழு கலாட்டா!!

0

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா என ஒப்பந்தம் செய்துள்ள பாமகவினர் ஏக குஷியில் உள்ளனர்.

கடந்த காலங்களில் சில கசப்புகள் இருந்ததால், அதைப் போக்க மெகா  விருந்துக்கு பாமக தலைமை ஏற்பாடு செய்தது. அதன்படி, பிப்ரவரி 22ம் தேதி இரவு, டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட முக்கிய தலைவர்களுக்கு 50 வகையான அசைவ உணவுகளும், ஆடு, கோழி, மீன் என அசைவ உணவுகளும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு, விருந்தும் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந் நிலையில் 23ம் தேதி பாமகவின் சிறப்பு பொதுக்குழு, புதுச்சேரி அருகே நடைபெற்றது. காலை 12 மணிக்கு தொடங்கிய பொதுக்குழு, மதியம் 1.30க்கு முடிவு பெற்றது.  அதனைத் தொடர்ந்து விருந்து இருக்கும் என நினைத்த பாமக பொதுக்குழு உறுப்பினர்கள் சற்றே ஏமாற்றம் அடைந்தனர்.  

கடந்த டிசம்பரில் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில் சிறப்பான விருந்து அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை விருந்து ஏற்பாடு செய்யப்பட வில்லை.

முதல் நாள் அதிமுகவினருக்கு கறி விருந்து அளித்த தலைமை,  மறுநாள் சொந்தக் கட்சி நிர்வாகிகளை பட்டினியுடன் அனுப்பியது நியாயம்தானா என்ற குரல் பொதுக்குழு உறுப்பினர்களிடம் எழாமல் இருந்திருக்குமா என்ன?

Leave A Reply

Your email address will not be published.