அபிநந்தன் விடுவிப்பு! கருணையுள்ளம் கொண்ட இம்ரான்! பாராட்டுக்களை அள்ளும் பிரதமர்!

0

கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று அங்குள்ள தீவிரவாத முகாம்களை அழித்து விட்டு வந்தன. நேற்று பாகிஸ்தான் எப்-16 போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. அந்த விமானங்களை இந்திய விமான படை விமானங்கள் துரத்தி அடித்தன. மேலும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தின.

அதேசமயம் பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய விமான படையின் மிக் போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறியது. மேலும் அந்த விமானத்தை ஒட்டி வந்த இந்திய விமான படை வீரர் அபிநந்தன் வர்த்தமானை கைது செய்ததாக கூறியது. 

இந்திய அரசும் அதனை உறுதி செய்தது. மேலும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியது. இந்நிலையில் சவுதி மற்றும் அமொிக்க தூதர்கள்  மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் இம்ரான்கான்  பிரதமர் மோடியிடம் போனில் பேசியதை தொடர்ந்து அபிநந்தன் விடுதலை செய்யப்படுவது உறுதியானது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் கைது செய்யப்பட்ட இந்திய விமான படை வீரர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் படுவார் என்று கூறினார்.  அபிநந்தன் நாளை இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியர்கள் மாத்திரமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் இம்ரான் கானை பாராட்டி வருகின்றனர். கருணையுள்ளம் கொண்ட இம்ரான், அமைதியை விரும்பும் மனிதர் என்றும் பாராட்டப்படுகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.